மொத்தம் 631 மனுக்களை பெற்று, அவற்றின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். இக்கூட்டத்தின் ஒருபகுதியாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், தீண்டாமை கடைப்பிடிக்காத மற்றும் நல்லிணக்கத்துடன் வாழும் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட வாலாஜாபாத் வட்டம், கட்டவாக்கம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான நிதியுதவியை, ஊராட்சி மன்றத்தலைவர் ஏ.அஞ்சலம்,
சாதிவேறுபாடுகளற்ற மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சியாக தேர்ந்தெடுக்கப்பட்ட குன்றத்தூர் வட்டம், வரதராஜபுரம் ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான நிதியுதவியை ஊராட்சி மன்றத்தலைவர் செல்வமணி, நாட்டரசன்பட்டு ஊராட்சிக்கு ரூ.10 லட்சத்திற்கான நிதியுதவியை ஊராட்சி மன்றத்தலைவர் வசந்தி சாம்பசிவம் ஆகியோரிடம் வழங்கினார். பின்னர், வன்கொடுமை தீருதவி தொகை ரூ.1.75 லட்சமும், வன்கொடுமையால் பாதிக்கப்பட்ட நபருக்கு இலவச வீட்டுமனை பட்டா ஆகியவற்றையும் வழங்கினார்.
மேலும், ஸ்ரீபெரும்புதூர் ஊராட்சி ஒன்றியம் கிளாய் ஆதிதிராவிட நலத்துறை நடுநிலைப்பள்ளியில் சத்துணவு சமையலராக பணிபுரிந்து, பணி காலத்தில் காலமான க.எல்லம்மாள் என்பவரின் வாரிசுதாரரான ஈஸ்வரி என்பவருக்கு சத்துணவு அமைப்பாளர் பணி நியமன ஆணையை வழங்கினார்.
தொடர்ந்து, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தொகுதி-IV தேர்வின் மூலம் தேர்வு செய்யப்பட்ட 9 நபர்களுக்கு இளநிலை உதவியாளர் பணி நியமன ஆணைகளையும் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பிறந்தநாள் விழா முன்னிட்டு, மாநில அளவிலான மகளிர் கபாடி போட்டியில் முதல் பரிசு பெற்ற காஞ்சிபுரம் மகளிர் சிறப்பு விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு மாவட்ட பரிசு கோப்பையை வழங்கி பாராட்டினார். இக்கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ஆர்த்தி, மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தனலட்சுமி, அரசுத்துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
* பட்டா வழங்கக்கோரி மனு
காஞ்சிபுரம் மாவட்டம், வாலாஜாபாத் ஒன்றியம், முத்தியால்பேட்டை கிராமம் எம்ஜிஆர் நகர் பகுதியில் வசிக்கும் 100க்கும் மேற்பட்ட கிராம மக்கள், தாங்கள் சாலை வசதி, மின்சார வசதி, குடிநீர் வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை அரசு மூலம் பெற்று வசித்து வருவதாகவும், எந்தவித ஆட்சேபனை இல்லாத இடத்தில் தலைமுறை தலைமுறையாக வசித்து வரும் தங்களுக்கு தற்போது குடியிருக்கும் வீட்டிற்கு பட்டா வழங்கிட வேண்டும் எனக்கோரி மனு அளித்தனர். மனுவை பெற்றுக்கொண்ட மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார்.
The post நல்லிணக்கத்துடன் சாதி வேறுபாடின்றி, மயானம் பயன்படுத்தும் சிறந்த ஊராட்சிகளுக்கு தலா ரூ.10 லட்சம் காசோலை: காஞ்சி கலெக்டர் வழங்கினார் appeared first on Dinakaran.