கோவை, மார்ச் 18: கோவையில் கோடை காலம் ஆரம்பிக்கும் முன்பே கடந்த மாதம் முதல் வெயில் வாட்டி வதைத்தது. இதனால் பொதுமக்கள் மிகவும் அவதியடைந்தனர். இதனால் பள்ளிக் குழந்தைகள் வேலைக்கு செல்பவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்நிலையில் கடந்த வாரம் கோவையில் மழை பெய்தது. இதனால், வெப்பம் சற்று தனிந்தது. இதனைத் தொடர்ந்து நேற்று காலை முதல் மாலை வரை வழக்கம் போல வெயில் கடுமையாக இருந்தது. இந்நிலையில் நேற்று மாலை கோவை ஈச்சனாரி, போத்தனூர், ஆத்துப்பாலம், உக்கடம், டவுன்ஹால், ரயில் நிலையம், காந்திபுரம், கணபதி, சரவணம்பட்டி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பலத்த மழை பெய்தது.இதில், ராமநாதபுரம், பீளமேடு, சிங்காநல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதில் சிங்காநல்லூர் அருகே உள்ள நஞ்சப்பா நகர் பகுதியில் 30 ஆண்டுகள் பழமையான மரம் ஒன்று மின் வயர்கள் மீது முறிந்து விழுந்தது. இதனால் அங்கு சேதமடைந்த நிலையில் இருந்த மின் கம்பமும் முறிந்து விழுந்தது. இந்த விபத்தில் அந்த வழியாக காரில் வந்த தம்பதியினர் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்.
The post கோவையில் காற்றுடன் கூடிய மழை appeared first on Dinakaran.