நெல்லை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது

கோவில்பட்டி: நெல்லை ரயில் நிலையத்தில் இருந்து சென்னைக்கு நேற்று முன்தினம் இரவு 8.40 மணிக்கு நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் புறப்பட்டு சென்றது. இரவு 9.30 மணிக்கு கோவில்பட்டி ரயில் நிலையம் அருகே இளையரசனேந்தல் சுரங்கப்பாதையின் மேல் சென்றபோது மர்ம நபர், ரயில் மீது கல் வீசி தாக்கினார். இதில் பி2 குளிர்சாதன பெட்டியின் கண்ணாடி சேதமடைந்தது. நல்லவேளையாக பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. பாதுகாப்பு பணியில் இருந்த ரயில்வே போலீசார் இதுபற்றி தூத்துக்குடி ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதுகுறித்து தூத்துக்குடி ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து விசாரணை நடத்தினர். இதில் நெல்லை எக்ஸ்பிரஸ் ரயில் மீது கல் வீசியவர் நடராஜபுரம் 6வது தெருவை சேர்ந்த கணேசன் மகன் சூர்யா என தெரிய வந்தது. அவரை நேற்று போலீசார் கைது செய்தனர்.

The post நெல்லை எக்ஸ்பிரஸ் மீது கல்வீசிய வாலிபர் கைது appeared first on Dinakaran.

Related Stories: