இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு


சென்னை: சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் இன்று பராமரிப்பு பணி நடைபெற உள்ளதால், 21 ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: சென்னை சென்ட்ரல் – கூடூர் பிரிவில் கவரப்பேட்டை மற்றும் பொன்னேரி ரயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் இன்று (17ம் தேதி) காலை 9.25 மணி முதல் மதியம் 2.25 மணி வரை நடைபெற உள்ளது. இதன் காரணமாக அந்த பாதையில் இயங்கும் மின்சார ரயில்கள் உள்பட 21 ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

அதன்படி இன்று காலை 5.40 மணிக்கு மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை மெமு பயணிகள் ரயில், காலை 8 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை – நெல்லூர் மெமு ரயில், காலை 8.05 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், காலை 8.35 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை மின்சார ரயில், காலை 9 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், காலை 9.30 மணிக்கு இயங்கும் மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் உள்ளிட்டவை ரத்து செய்யப்பட உள்ளன. அதேபோல் காலை 9.30 மணிக்கு புறப்படும் சென்னை கடற்கரை – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில், காலை 10.15 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – சூலூர்பேட்டை மின்சார ரயில், காலை 10.30 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில்,

காலை 11.45 மணிக்கு புறப்படும் மூர்மார்க்கெட் – கும்மிடிப்பூண்டி மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன. மேலும் காலை 4.25 மணிக்கு புறப்படும் ஆவடி – மூர்மார்க்கெட் மெமு ரயில், காலை 9.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் மின்சார ரயில், காலை 10 மணிக்கு இயங்கும் சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் மின்சார ரயில், காலை 10.20 மணிக்கு புறப்படும் நெல்லூர் – சூலூர்பேட்டை மெமு ரயில், காலை 10.55 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – சென்னை கடற்கரை மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளன.

அதேபோல் காலை 11.25 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் மின்சார ரயில், காலை 12 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் மின்சார ரயில், காலை 11.45 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 12 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் மெமு ரயில், மதியம் 1 மணிக்கு புறப்படும் கும்மிடிப்பூண்டி – மூர்மார்க்கெட் மின்சார ரயில், மதியம் 1.15 மணிக்கு புறப்படும் சூலூர்பேட்டை – மூர்மார்க்கெட் மின்சார ரயில் ஆகியவை ரத்து செய்யப்பட உள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post இன்று பராமரிப்பு பணி காரணமாக கும்மிடிப்பூண்டி மார்க்க மின்சார ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு appeared first on Dinakaran.

Related Stories: