சென்னை: தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாய நிர்வாக உறுப்பினராக செல்வி அபூர்வா நியமனம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு சட்டத்தின் கீழ் தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உருவாக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினராக, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி செல்வி அபூர்வா நியமிக்கப்படுகிறார். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் முடிவுகள், வழிக்காட்டுதல்கள் அல்லது உத்தரவுகளுக்கு எதிராக மேல்முறையீடு செய்வதற்காக தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
The post தமிழ்நாடு ரியல் எஸ்டேட் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தின் நிர்வாக உறுப்பினராக அபூர்வா நியமனம்: அரசு அறிவிப்பு appeared first on Dinakaran.