சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று விவாதம், வாக்கெடுப்பு: துணை சபாநாயகர் அவையை நடத்துவார்

சென்னை: சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது இன்று சட்டசபையில் விவாதம், வாக்கெடுப்பு நடக்கிறது. தமிழ்நாடு அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான பட்ஜெட் சட்டப்பேரவையில் கடந்த 14ம் தேதி தாக்கல் செய்யப்பட்டது. நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தமிழக அரசின் பட்ஜெட்டை தாக்கல் ெசய்தார். பட்ஜெட் தாக்கலின் போது அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் ஆர்.பி.உதயகுமார் ஒரு பிரச்னை தொடர்பாக பேச முயன்றார். அப்போது சபாநாயகர் அப்பாவு தமிழக அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. எனவே திங்கள்கிழமை (17ம் தேதி) எதிர்க்கட்சி துணைத்தலைவர் குறிப்பிட்ட பிரச்னை குறித்து பேச அனுமதி அளிக்கப்படும்” என்றார்.

தொடர்ந்து எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியும் எழுந்து ஒரு பொருள் குறித்து பேச முயன்றார். அவரையும் சபாநாயகர் அப்பாவு பேச அனுமதி அளிக்கவில்லை. இதைத்தொடர்ந்து அதிமுக எம்எல்ஏக்கள் அனைவரும் பட்ஜெட் உரையை புறக்கணித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் வெளிநடப்பு செய்தனர். அவர்களுடன் பாஜ உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்புக்கு பின்னர் நடந்த அலுவல் ஆய்வு குழு கூட்டத்திற்கு பிறகு சபாநாயகர் அப்பாவு அளித்த பேட்டியில், ‘‘அதிக நேரம் பேச அனுமதிக்கவில்லை, பேசுவதை தொலைக்காட்சியில் காட்டவில்லை என நம்பிக்கை இல்லா தீர்மானம் அதிமுக சார்பில் கொண்டு வந்துள்ளனர்.

இதற்கு ஏற்கனவே பதில் அளித்து உள்ளோம். யார் பேசுவதையும் காட்ட கூடாது என குறுகிய எண்ணத்துடன் இந்த அரசு செயல்படவில்லை. கடந்த முறை டெக்னிக்கல் பிரச்னை என சட்டமன்றத்தில் பதில் அளித்துள்ளேன். இனி அப்படி ஒன்றும் நடைபெறாது. நம்பிக்கை இல்லா தீர்மானம் 17ம் தேதி (இன்று) பேரவையில் எடுத்துக் கொள்ளப்படும். சட்டமன்றத்தில் இது புதுசு அல்ல. பல சந்தர்ப்பங்களில் சபாநாயகர் மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதை சபையில் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறியிருந்தார்.

இதற்கிடையில் நேற்று முன்தினம் தமிழக அரசின் 2025-2026ம் ஆண்டுக்கான ராணுவம் சார்பில், அந்த அமைப்பின் செய்தி தொடர்பாளர் ஜியந்த் பலூச் திடுக்கிடும் அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அந்த அறிவிப்பில், ஜாஃபர் ரயில் கடத்தலில் பணயக்கைதிகளாக பிடித்து வைக்கப்பட்ட 214 பணயக்கைதிகளும் கொல்லப்பட்டுள்ளனர். பலூச் விடுதலை ராணுவம், பாகிஸ்தான் ராணுவத்திற்கு போர்க் கைதிகளை பரிமாறிக் கொள்ள 48 மணி நேரம் காலக்கெடு வழங்கியது. இது பணயக்கைதிகளின் உயிரை காப்பாற்றுவதற்கான கடைசி வாய்ப்பாக வழங்கப்பட்டது. ஆனால் பிடிவாதத்தின் விளைவாக 214 பணயக்கைதிகளும் தூக்கிலிடப்பட்டனர்.

நாங்கள் எப்போதும் சட்டத்தின்படி தான் நடப்போம். பாகிஸ்தானின் பிடிவாதம் தான் எங்களை இப்படி செய்ய கட்டாயப்படுத்தியது. எங்களது தரப்பில் மஜீத் படைப்பிரிவைச் சேர்ந்த ஐந்து ஃபிதாயின்கள் உட்பட 12 முஜாஹிதீன்கள் பலியாகினர்’ என்று கூறப்பட்டுள்ளது. பலூச் விடுதலை ராணுவத்தின் இந்த அறிவிப்பு சர்வதேச நாடுகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இருப்பினும் 214 பேர் தூக்கிலிடப்பட்டதற்கான ஆதாரங்கள் எதுவும் வெளியிடப்படவில்லை. இதனால் பாகிஸ்தான் அரசு, பலூச் விடுதலை ராணுவத்தின் அறிவிப்பை ஏற்கவில்லை.

The post சபாநாயகர் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது சட்டசபையில் இன்று விவாதம், வாக்கெடுப்பு: துணை சபாநாயகர் அவையை நடத்துவார் appeared first on Dinakaran.

Related Stories: