சத்தியமங்கலம் பணம் கையாடல்: நீதிமன்ற ஊழியர் கைது

 

சத்தியமங்கலம், மார்ச்15: ஈரோடு ஔவையார் வீதியைச் சேர்ந்தவர் ஞானபிரகாஷ்(38). இவர் சத்தியமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் தலைமை எழுத்தராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2024ம் ஆண்டு செப்டம்பர் 9ம் தேதி முதல் இந்த நீதிமன்றத்தில் பணியாற்றி வந்த இவர் நீதிமன்றத்தில் முடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் கைப்பற்றப்பட்டு அரசுடமையாக்க உத்தரவிடப்பட்ட தொகைகள், காவல் நிலைய குற்றவழக்குகளில் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட தொகைகள்,அபராத தொகையை அரசு கணக்கில் செலுத்தாமல் நீதிமன்ற கணக்கில் வரவு வைக்காமல் இருந்தது என மொத்தம் ரூ.3.39 லட்சம் பணம் கையாடல் செய்ததை ஆண்டு தணிக்கையின் போது தணிக்கை அதிகாரிகள் கண்டுபிடித்தனர்.

இதையடுத்து மாவட்ட நீதிபதி அறிவுறுத்தலின் பேரில் சத்தியமங்கலம் நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி உமாதேவி பணம் கையாடல் செய்த ஞானபிரகாஷ் மீது நடவடிக்கை எடுக்குமாறு சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதைத் தொடர்ந்து சத்தியமங்கலம் போலீசார் ஞானப்பிரகாசை கைது செய்து அவர் மீது வழக்கு பதிந்து சத்தியமங்கலம் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.

The post சத்தியமங்கலம் பணம் கையாடல்: நீதிமன்ற ஊழியர் கைது appeared first on Dinakaran.

Related Stories: