சென்னை: தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வுக்கு தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது. மே, ஜூன் 2025ல் நடைபெறவுள்ள தொடக்கக் கல்வி பட்டயத் தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும் தனித்தேர்வர்கள் www.dge.tn.gov.in என்ற இணையம் வழியாக விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, விண்ணப்பத்தினை பூர்த்தி செய்து, ஏற்கனவே தேர்வெழுதி தேர்ச்சி பெற்ற மதிப்பெண் சான்றிதழ்களின் அனைத்து நகல்களையும் இணைத்து தேர்வர் வசிக்கும் மாவட்டத்தில் அமைந்துள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் வாயிலாக மார்ச் 18ம் தேதி முதல் மார்ச் 24ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கேயே தேர்வுக் கட்டணத்தினையும் செலுத்த வேண்டும். மேல் குறிப்பிட்ட தேதிகளில் விண்ணப்பிக்க தவறியவர்கள் சிறப்பு அனுமதி திட்டத்தில் (தட்கல்) மார்ச் 25, 26ஆகிய தேதிகளில் சிறப்பு கட்டணமாக ரூ. 1000 செலுத்தி விண்ணப்பிக்கலாம். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
The post தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு: தனித் தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம் appeared first on Dinakaran.