இந்தத் தொலைநோக்குப் பார்வையுடன் சென்னையில் பழைய மாமல்லபுரம் சாலையினை தகவல் தொழில்நுட்ப வழித்தடமாக சிறப்புடன் மாற்றி அமைத்ததைப் போன்று ஒசூர் நகரத்தை ஒட்டி உலகத்தரம் வாய்ந்த உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஒசூர் அறிவுசார் பெருவழித்தடம் ஒன்று அமைக்கப்படும். உலகின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் தங்களுடைய உலகளாவிய திறன் மையங்கள் மற்றும் ஆராய்ச்சி மேம்பாட்டு மையங்களை அங்கு அமைத்திடத் தேவையான அனைத்து வசதிகளும் இந்த வழித்தடத்தில் இடம் பெற்றிருக்கும்.
மத்திய மண்டலத்தில் 5000 நபர்கள் வேலைவாய்ப்பு பெறும் வகையில், திருச்சியில் 250 ஏக்கர் பரப்பளவில் பொறியியல் மற்றும் வார்ப்பகத் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். தூத்துக்குடி மாவட்டம் ஏற்கெனவே பசுமை ஹைட்ரஜன் மற்றும் உற்பத்தித் துறையில் கணிசமான முதலீடுகளை ஈர்த்துள்ளது. அதைத் தொடர்ந்து இம்மாவட்டத்தில் செயற்கை இழை மற்றும் தொழிநுட்ப ஜவுளித் தொழிற்பூங்கா ஒன்று அமைக்கப்படும். கடலூர் மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவிலும் புதுக்கோட்டை மாவட்டத்தில் 200 ஏக்கர் பரப்பளவிலும் புதிய தொழிற்பூங்காக்கள் அமைக்கப்படும்.
கோவை மாவட்டம் பம்பு மோட்டார் உற்பத்தி மற்றும் வார்ப்பகத் தொழிலில் நாட்டிலேயே சிறப்பிடம் பெற்றுள்ளது. அத்துறைகளின் அடுத்தகட்ட வளர்ச்சியை எதிர்நோக்கி உயர் தொழில்நுட்ப பம்பு மோட்டார் உற்பத்திக்கான உயர்திறன் மையம் ஒன்றும் வார்ப்பகத் தொழிலுக்கான உயர்திறன் மையம் ஒன்றும், தொழில் கூட்டமைப்பினரோடு இணைந்து டிட்கோ நிறுவணம் அமைக்கும்.
The post ரூ.400 கோடி மதிப்பீட்டில் ஓசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா: பட்ஜெட்டில் தகவல் appeared first on Dinakaran.