சென்னை: பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்படும் என தமிழக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. தாய், தந்தையரை இழந்த 50,000 குழந்தைகளுக்கு 18 வயது வரை மாதம் ரூ.2,000 வழங்கப்படும். ஊட்டி ரேஸ் கோர்ஸ் பகுதியில் ரூ70 கோடி மதிப்பில் எழில்மிகு சுற்றுலாப் பூங்கா அமைக்கப்படும் என தமிழ்நாடு பட்ஜெட்டில் அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அதிகளவில் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் வகையில் நீலமலையின் இயற்கைச் சூழலுக்கு இணங்க நறுமணப் பொருட்கள் தோட்டம், வனவியல் மற்றும் பறவைகள் காட்சிப் பகுதிகள், இயற்கை வழிப்பாதைகள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post பெற்றோர் இல்லாத குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 உதவி வழங்கப்படும்: தமிழக பட்ஜெட்டில் அறிவிப்பு! appeared first on Dinakaran.