சென்னை: சட்டப்பேரவை தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நிலையில் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு நடுவே, 2025-26-ம் நிதி ஆண்டுக்கான தமிழக பொது பட்ஜெட்டை, சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். பட்ஜெட் தாக்கலின் போது பல்வேறு அறிவிப்புகள் வெளியாகலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால், அடுத்த ஆண்டில் இடைக்கால பட்ஜெட்டாக மட்டுமே தாக்கல் செய்ய முடியும். அந்த வகையில், இன்றைய பட்ஜெட்தான் இந்த அரசு தாக்கல் செய்யும் 5-வது மற்றும் முழுமையான பட்ஜெட் ஆகும்.
இடைக்கால பட்ஜெட்டில் புதிய அறிவிப்புகள் எதையும் வெளியிட இயலாது என்பதால், இன்றைய பட்ஜெட்டில் பல்வேறு புதிய அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதே போல், நாளை (மார்ச் 15) வேளாண் பட் ஜெட்டை அமைச்சர் எம்.ஆர்கே. பன்னீர் செல்வம் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளது. இதைத் தொடர்ந்து, 17-ம் தேதி முதல் விவாதம் தொடங்கும். இந்த விவாதம் 4-5 நாட்கள் நடைபெறலாம். இதுகுறித்த அறிவிப்பை பேரவை தலைவர் அப்பாவு இன்று வெளியிடுவார். ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, முன்பண மானிய கோரிக்கை, கூடுதல் செலவுகளுக்கான மானிய கோரிக்கைகளை அமைச்சர் தங்கம் தென்னரசு மார்ச் 21-ம் தேதி தாக்கல் செய்வார். அன்று, பட்ஜெட் மீதான விவாதத்துக்கு தனது பதில்உரையையும் அவர் வழங்குவார். இதைத் தொடர்ந்து, துறை வாரியாக மானிய கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெறும்.
The post நடப்பு நிதியாண்டுக்கான பட்ஜெட்டை தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார்!! appeared first on Dinakaran.