இந்த சீசனிலும் மொத்தம் 10 அணிகள் பங்கேற்கவுள்ளன. இந்த சீசனுக்கான மெகா ஏலம் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. இதில் 62 வெளிநாட்டவர் உள்பட 182 வீரர்கள் ரூ.639.15 கோடிக்கு வாங்கப்பட்டனர். இதனையடுத்து ஐபிஎல் அணிகள் தங்களது வீரர்களை தயார்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றன.
இந்நிலையில், 2025 ஐபிஎல் தொடரில் சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் போட்டிகளை காணவரும் ரசிகர்கள் போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம் என CSK நிர்வாகம் தெரிவித்துள்ளது. இது போட்டி தொடங்குவதற்கு 3 மணி நேரத்துக்குள்ளாக மட்டுமே செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
The post CSK ரசிகர்களுக்கு குட் நியூஸ்; போட்டியின் டிக்கெட்டை காண்பித்து மாநகரப் பேருந்துகளில் இலவசமாக பயணிக்கலாம்! appeared first on Dinakaran.