லால்குடி, மார்ச் 14: லால்குடி அருகே மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பகுதி நேர நியாய விலை கடையை எம்பி திருச்சி சிவா திறந்து வைத்தார். திருச்சி மாவட்டம் லால்குடி ஊராட்சி ஒன்றியம் மேட்டுப்பட்டி ஊராட்சி குறிச்சி கிராமத்தில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பகுதி நேர நியாய விலை கடை அமைக்கப்பட்டது.
இதன் விழாவிற்கு எம்எல்ஏ சௌந்தர பாண்டியன் முன்னிலை வகித்தார். திருச்சி சிவா எம்பி நியாய விலைக்கடையை திறந்து வைத்து நியாய விலைப் பொருட்களை வழங்கினார். நிகழ்ச்சியில் லால்குடி தாசில்தார் முருகன், கூட்டுறவு பதிவாளர் பட்டாபிராமன் வழக்கறிஞர் அங்கமுத்து மற்றும் கிராம மக்கள் கலந்து கொண்டனர்.
The post லால்குடி அருகே குறிச்சியில் பகுதிநேர ரேஷன் கடை appeared first on Dinakaran.
