திருவொற்றியூர்: கொத்தவால்சாவடி போலீசார் நேற்று முன்தினம் அப்பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சவுகார்பேட்டை பகுதியில் ஸ்போர்ட்ஸ் கடை நடத்தி வரும் ஒருவர் பைக்கில் வந்தார். அவரை மடக்கி விசாரணை செய்தபோது அவர் வைத்திருந்த பையில் ரூ.30 லட்சம் இருந்தது.
அதற்கு உரிய ஆவணம் இல்லாததால் போலீசார் அதனை பறிமுதல் செய்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர். வருமான வரித்துறை அதிகாரிகள், அந்த பணத்தை பறிமுதல் செய்து, இது ஹவாலா பணமா அல்லது கணக்கில் வராத பணமா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
The post உரிய ஆவணமில்லாத ரூ.30 லட்சம் பறிமுதல் appeared first on Dinakaran.