பின்னர், அமைச்சர் ஆர்.காந்தி பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் ஆணைக்கிணங்க, சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டமான தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் 2021-22ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த 845 பட்டம், பட்டயம் பயின்ற பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 வீதமும்,
10ம் வகுப்பு, 12ம் வகுப்பு பயின்ற 911 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 வீதமும் என மொத்தம் 1,756 பயனாளிகளுக்கு ரூ.6.50 கோடி நிதி உதவியும், 14.05 கி.கி தங்கமும், 2022-23ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த 225 பட்டம் / பட்டயம் பயின்ற பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.50,000 வீதமும், 10ம் வகுப்பு பயின்ற 180 பயனாளிகளுக்கு 8 கிராம் தங்கம் மற்றும் ரூ.25,000 வீதமும் என மொத்தம் 405 பயனாளிகளுக்கு ரூ.1.58 கோடி நிதி உதவியும், 3.24 கி.கி தங்கம் வழங்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, 2023-24ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் 10ம் வகுப்பு பயின்ற 60 பயனாளிகளும், 123 பட்டதாரி பயனாளிகளும் என மொத்தம் 183 பயனாளிகளுக்கு ரூ.76.50 லட்சம் நிதியுதவி மற்றும் ஒரு 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் 1.5 கிலோ கிராம் தங்கமும் வழங்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, நேற்று முத்துலட்சுமி ரெட்டி அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், ஈ.வெ.ரா. மணியம்மையார் நினைவு விதவை மகள் திருமண நிதியுதவி திட்டம், அன்னை தெரசா நினைவு ஆதரவற்ற பெண் திருமண நிதியுதவி திட்டம், டாக்டர் தர்மாம்பாள் நினைவு விதவை மறுமண திருமண நிதியுதவி திட்டம் ஆகிய 4 திருமண நிதியுதவி திட்டங்களின்படி, 2024-25ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள காஞ்சிபுரம் வட்டத்தில் 37 பயனாளிகள், உத்திரமேரூர் வட்டத்தில் 20 பயனாளிகள்,
வாலாஜாபாத் வட்டத்தில் 12 பயனாளிகள் என மொத்தம் 69 பட்டதாரி பயனாளிகளும், காஞ்சிபுரம் வட்டத்தில் 26 பயனாளிகள், உத்திரமேரூர் வட்டத்தில் 5 பயனாளிகள், வாலாஜாபாத் வட்டத்தில் 11 பயனாளிகள் என 10ம் வகுப்பு பயின்ற 42 பயனாளிகளும் சேர்ந்து மொத்தம் 111 பயனாளிகளுக்கு ரூ.45 லட்சம் நிதியுதவியும் மற்றும் ஒரு 8 கிராம் தங்கம் வீதம் மொத்தம் ரூ.67,55,238 லட்சம் மதிப்பிலான 888 கிராம் தங்கமும் என வழங்கப்பட்டு பயனடைதுள்ளனர்.
மேலும், பெண் சிசுக்கொலையை ஒழித்திடவும், பெண் குழந்தைகளின் கல்வியை உறுதி செய்திடவும் மற்றும் அவர்களின் உரிமைகளை காத்திடவும் அரசால் அக்குழந்தைகளின் பெயரில் நேரடியாக வைப்பு நிதி முதலீடு செய்து உதவிபுரியும் வகையில், முதலமைச்சரின் பெண்குழந்தை பாதுகாப்பு திட்டம் 1992ம் ஆண்டு முதல் செயல்படுத்தபட்டு வருகிறது. முதலமைச்சரின் இரண்டு பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்தில் 2021-22ம் நிதியாண்டில் 900 பெண் குழந்தைகளும், 2022-23ம் நிதியாண்டில் 811 பெண் குழந்தைகளும், 2023-24ம் நிதியாண்டில் 763 பெண் குழந்தைகளும், 2024-25ம் நிதியாண்டில் 613 பெண் குழந்தைகளும் பதிவு செய்யப்பட்டு வைப்பீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து, 15 குடும்பங்களை சேர்ந்த 30 பெண் குழந்தைகளுக்கு தலா ரூ.25,000 வீதம் என மொத்தம் ரூ.7,50 லட்சம் நிதியுதவில் வைப்புத்தொகை ரசீது வழங்கப்பட்டுள்ளன. சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் நலிவுற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள், உடல் ஊனமுற்ற மகளிர் ஆகியோர் சுயதொழில் செய்து தங்கள் வாழ்க்கை தரத்தை உயர்த்திக்கொள்ள உதவும் வகையில் தையல் இயந்திரம் இலவசமாக வழங்குதல் இத்திட்டத்தின் நோக்கமாகும்.
2021-22ம் நிதியாண்டில் காஞ்சிபுரம் மாவட்டத்தை சார்ந்த 75 பயனாளிகளும், 2022-23ம் நிதியாண்டில் 18 பயனாளிகளும், 2023-24ம் நிதியாண்டில் 25 பயனாளிகளுக்கு சாதாரண தையல் இயந்திரமும், 10 பயனாளிகளுக்கு உயர்தர தையல் இயந்திரமும் பெற்று பயனடைந்துள்ளார்கள். தற்போது, 2024-25ம் நிதியாண்டில் ஒதுக்கீடு செய்யப்பட்ட 44 பயனாளிகளுக்கு ரூ.1.98 லட்சம் மதிப்பிலான இலவச தையல் இயந்திரமும் வழங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன், காஞ்சிபுரம் தொகுதி எம்பி க.செல்வம், உத்திரமேரூர் எம்எல்ஏ க.சுந்தர், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் நித்தியா சுகுமார், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி குமார், வாலாஜாபாத் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கே.தேவேந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர் சியாமளா, உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள், அரசு அலுவலர்கள் மற்றும் பயனாளிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
The post காஞ்சியில் 2024-25ம் நிதியாண்டில் 44 பயனாளிகளுக்கு ரூ.1.98 லட்சம் மதிப்பில் இலவச தையல் மிஷின்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல் appeared first on Dinakaran.
