இந்நிலையில் இன்று காலை சுங்கச்சாவடியை திறப்பதற்கு சுங்கச்சாவடி நிர்வாகம் ஏற்பாடுகளை செய்தது. இதற்கு அப்பகுதியிலுள்ள விவசாயிகளும், பொதுமக்களும் கடும் எதிர்ப்புகளை தெரிவித்தனர். இன்று காலை சரியாக 8 மணி அளவில் சுங்கச்சாவடி செயல்பாட்டிற்கு வரும் நிலையில் திடீரென சுங்கச்சாவடி அடித்து நொறுக்கப்பட்டது. சுங்கச்சாவடியில் இருந்த அனைத்து உபகரணங்களும் உடைத்து சேதப்படுத்தப்பட்டன. இதனால் அப்பகுதியில் பதற்றமும், பரபரப்பும் நிலவியது. சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுமக்கள், விவசாயிகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானவர்கள் சுங்கச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகின்றனர். பட்டினம்பட்டி காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
The post திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லட்சுமிபுரம் சுங்கச்சாவடியை பொதுமக்கள் சூறையாடியதால் பரபரப்பு..!! appeared first on Dinakaran.
