நாம் நாமாக இருக்க வேண்டும் தொப்பி போட்டு தனது அடையாளத்தை மாற்ற வேண்டுமா என்ன? விஜய்க்கு எஸ்.வி.சேகர் கேள்வி

சென்னை: நாம் நாமாக இருக்க வேண்டுமே தவிர தொப்பி போட்டு அடையாளத்தை மாற்ற வேண்டுமா என்ன என தவெக தலைவர் விஜய் மீது எஸ்.வி.சேகர் சரமாரி கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து சென்னையில் நிருபர்களிடம் அவர் கூறியதாவது: இப்தார் நோன்பு நிகழ்ச்சியை கூட விஜய்யால் ஒழுங்காக நடத்தமுடியவில்லை. அனைவரையும் ஒரே இடத்தில் இல்லாமல் முஸ்லீம் தலைவர்கள் ஒருபுறம், கட்சிக்காரர்கள் ஒருபுறம் என அமரவைத்து நிகழ்ச்சியை நடத்தி இருக்கலாம். நானும் இப்தார் நோன்பு நிகழ்ச்சிக்கு விபூதி, குங்குமத்துடன் சென்றுள்ளேன். அந்த நோன்பின் முறையை பாராட்டுகிறேன்.

அதற்காக தொப்பி, குல்லா அணிந்து முஸ்லிமாக மாறி செல்லமுடியுமா? இதனை முஸ்லிம் சகோதரர்கள் நம்பவும் மாட்டார்கள். நாம் எல்லோரையும் போல மாற முடியாது. தொப்பி போட்டு தனது அடையாளத்தை மாற்ற வேண்டுமா? நாம் நாமாக இருக்க வேண்டும்; அனைவரிடமும் அனுசரித்து செல்ல வேண்டும். அது தான் சமுதாயம். நாம் வெஜிட்டேரியனாக இருந்தாலும் என் பக்கத்தில் அசைவம் சாப்பிட்டாலும் அது அவருடைய உரிமை. சமுதாயத்தில் எல்லோருடனும் சேர்ந்து பழகிக் கொள்ள வேண்டும் அதில் விஜய் தோல்வியடைந்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.

The post நாம் நாமாக இருக்க வேண்டும் தொப்பி போட்டு தனது அடையாளத்தை மாற்ற வேண்டுமா என்ன? விஜய்க்கு எஸ்.வி.சேகர் கேள்வி appeared first on Dinakaran.

Related Stories: