நடிகர் கராத்தே ஹுசேனிக்கு புற்றுநோய்

சென்னை: நடிகர் கராத்தே ஹுசேனிக்கு ரத்த புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கே.பாலசந்தர் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் கராத்தே ஹுசேனி. ‘புன்னகை மன்னன்’ படத்தில் இவர் அறிமுகமானார்.

இப்படத்தை தொடர்ந்து ‘வேலைக்காரன்’, ‘மூங்கில் கோட்டை’, ‘உன்னை சொல்லி குற்றமில்லை’ உள்ளிட்ட படங்களில் தொடர்ந்து நடிக்க ஆரம்பித்தார். இன்னொரு பக்கம் நடிகர்கள் விஜய், பவன் கல்யாண் உள்ளிட்டோருக்கு ஹுசைனி கராத்தே பயிற்சி அளித்திருக்கிறார்.

இந்நிலையில், அண்மையில் பேட்டி ஒன்றில் ஹுசேனி, தனக்கு ரத்த புற்றுநோய் வந்திருப்பதாக தெரிவித்துள்ளார். தற்போது இந்த தகவல் இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், ”எனக்கு ரத்த புற்றுநோய் உள்ளது. நான் ஒருநாள் வாழ்வதற்கு 2 யூனிட் ரத்தம் மற்றும் பிளேட்லெட்ஸ் வேண்டும், இன்னும் சில நாட்கள் தான் நான் உயிரோடு இருப்பேன். எனக்கு மன தைரியம் அதிகம், நான் கராத்தே சொல்லிக்கொடுக்கும் இடத்தை விற்கலாம் என்று முடிவு செய்துவிட்டேன்’’ என தெரிவித்துள்ளார்.

The post நடிகர் கராத்தே ஹுசேனிக்கு புற்றுநோய் appeared first on Dinakaran.

Related Stories: