வையம்பட்டி டோல் பிளாசாவில் காருக்கு இலவச அனுமதி சீட்டு கேட்டு தேமுதிக நிர்வாகி அடாவடி

 

துவரங்குறிச்சி, மார்ச் 11: தேனி மாவட்டம் பெரியகுளத்தை சேர்ந்தவர் பாண்டியராஜன் மகன் யுவராஜ் (33). பெரியகுளம் தேமுதிக நகரச் செயலாளராக உள்ளார். நேற்று அவரது நண்பர்களுடன் காரில் திருச்சியில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த போது, வையம்பட்டி டோல் பிளாசாவில் அவரது காருக்கு இலவச அனுமதி வேண்டும் என கூறியுள்ளார். அதற்கு டோல் பிளாசா ஊழியர்கள் மறுத்துள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த யுவராஜ் காரை வேகமாக ஓட்டி செக்போஸ்ட்டை இடித்துவிட்டு வேகமாக செல்ல முயன்றதாக தெரிகிறது. அப்போது அங்குள்ள ஊழியர்களுக்கும் யுவராஜிக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த இருதரப்பினரும் மணப்பாறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்த வையம்பட்டி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post வையம்பட்டி டோல் பிளாசாவில் காருக்கு இலவச அனுமதி சீட்டு கேட்டு தேமுதிக நிர்வாகி அடாவடி appeared first on Dinakaran.

Related Stories: