ஆர்கே பேட்டை அருகே ஏரி கால்வாயை கடப்பதற்கு கிராம மக்கள் அவதி: தொட்டிப்பாலம் அமைக்க கோரிக்கை

 

ஆர்.கே.பேட்டை: ஆர்கே பேட்டை அருகே ஏரி கால்வாயை கடக்க முடியாமல் கிராம மக்கள் அவதிப்படுகின்றனர். எனவே அங்கு தொட்டிப்பாலம் அமைக்க கோரிக்கை விடுத்துள்ளனர். ஆர்.கே.பேட்டை ஒன்றியம் சானுார்மல்லாவரம் ஊராட்சியில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இவர்கள் விவசாயத்தை நம்பியே வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் சுமார், 70 ஏக்கர் பரப்பில், நெல், வேர்கடலை, காய்கறி, கீரை, கேழ்வரகு, சேனைக்கிழக்கு மற்றும் வாழை போன்றவற்றை பயிரிடுகின்றனர்.

இவர்கள் தினந்தோறும் காய்கறிகள், கீரை அறுவடை செய்து, வாகனம் மூலம் சென்னைக்கு கொண்டு செல்கின்றனர். இந்த வாகனங்கள் சோளிங்கர் ஏரி வரவுக்கால்வாய் வழியாகச் சென்று வருகிறது. மழைக்காலத்தில் ஏரிக்குச் செல்லும் தண்ணீர் மற்றும் வெளியேறும் தண்ணீரால் வாகனங்கள் செல்ல முடியாத நிலை உள்ளது. இதனால் வாகனங்கள் பெரியராமாபுரம், சகஸ்ரபத்மாபுரம் வழியாக 7 கிமீ சுற்றிச் செல்ல வேண்டியுள்ளன.

மேலும் விவசாயிகள் கால்நடைகளை மேய்ச்சலுக்கு ஓட்டிச் செல்லும்போது சோளிங்கர் ஏரி வரவு கால்வாயில் தண்ணீர் இருந்தால், கால்நடைகளும், 7 கிமீ சுற்றி ஓட்டிச் செல்ல வேண்டும். எனவே கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயிகள் மற்றும் கிராம பொதுமக்கள் நலன் கருதி, சோளிங்கர் ஏரி வரவு கால்வாயில், தொட்டிப்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர். இதுகுறித்து மனுவாகவும் கொடுத்துள்ளனர்.

The post ஆர்கே பேட்டை அருகே ஏரி கால்வாயை கடப்பதற்கு கிராம மக்கள் அவதி: தொட்டிப்பாலம் அமைக்க கோரிக்கை appeared first on Dinakaran.

Related Stories: