மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம்; மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: சர்வதேச மகளிர் தினத்தை ஒட்டி துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர்; சமூகத்தில் சரி பாதி இருக்கின்ற மகளிர் அனைவருக்கும் என் இனிய உலக மகளிர் தின வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். மேம்பட்ட சமூகத்தின் வளர்ச்சி பெண் விடுதலையில் இருந்தே தொடங்குகிறது. கல்வி – பண்பாடு – கலாச்சாரம் – பொருளாதாரம் என பல்வேறு தளங்களில் மகளிரின் தற்சார்பையும் – சுதந்திரத்தையும் உறுதி செய்வதே திராவிட இயக்கத்தின் லட்சியம்.

அதனை, பெரியார் – அண்ணா – கலைஞர் அவர்கள் வழியில், மகளிர் விடியல் பயணம் – புதுமைப்பெண் – கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம் போன்ற மகளிர் நல திட்டங்கள் மூலம் நம் முதலமைச்சர் அவர்கள் நிறைவேற்றி வருகிறார்கள். மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம். மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

The post மகளிர் ஏற்றத்துக்கு என்றும் அயராது உழைத்திடுவோம்; மகளிர் உரிமைகளை நிலைநாட்டிடுவோம் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் appeared first on Dinakaran.

Related Stories: