இந்த போராட்டங்களை பாதுகாப்பு படையினர் ஒடுக்கினர். இதையொட்டி நடந்த மோதல்களில் 500 பேர் பலியானார்கள். பாடகரும் இசை கலைஞருமான மெஹ்தி யராஹி ஈரானிய நகரங்களில் பெண்கள் ஹிஜாப் இல்லாமல் வெளியில்செல்ல வேண்டும் என்று பாடல் பாடினார். இந்த வீடியோ பாடல் வைரலாக பரவியதை அடுத்து 2023ம் ஆண்டு யராஹி கைது செய்யப்பட்டார். இந்த நிலையில்,யராஹிக்கு நேற்று முன்தினம் 74 கசையடி தண்டனை வழங்கப்பட்டது என்று அவரது வழக்கறிஞர் ஹஹ்ரா மினுயி எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். அரசு அதிகாரி ஒருவர் கூறுகையில்,மது குடித்ததற்காக யராஹிக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. பாடல் தொடர்பான குற்றத்துக்காக அல்ல என்று கூறினார்.
The post ஹிஜாப்புக்கு எதிராக பாடல் ஈரான் பாடகருக்கு கசையடி appeared first on Dinakaran.
