பச்சரிசி – 1 கப்,
துவரம் பருப்பு, கடலைப்பருப்பு – இரண்டும் கலந்து ½ கப், காய்ந்த மிளகாய் – 2,
பெருங்காயம் – 1 துண்டு,
உப்பு, எண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை:
அரிசி, துவரம் பருப்பு, கடலைப்பருப்பை ஊறவைத்து, காய்ந்த மிளகாய், பெருங்காயம் சேர்த்து மிக்சியில் வடைக்கு அரைப்பது போல் கெட்டியாக அரைத்து உப்பு சேர்த்து புளிக்க வைக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி பக்கோடா போல் பொரித்து எடுக்கவும்.