கருணை கிழங்கு வறுவல்

தேவையான பொருட்கள்

கருணை கிழங்கு (தோல் நீக்கியது) – 1/4 கிலோ
புளி – சிறிய அளவு
உப்பு – தேவையான அளவு
மிளகாய் தூள் – தேவையான அளவு
எலுமிச்சம் பழச்சாறு – 1 ஸ்பூன்
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
தண்ணீர் – 2 ஸ்பூன்

செய்முறை:

கருணை கிழங்கை தோல் சீவி, சிறு சிறு துண்டுகளாக நீள வாகில் வெட்டி கொள்ளவும்.பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி, இந்த வெட்டிய கிழங்கு துண்டுகளை சேர்த்து 80% வரை வேக வைக்கவும்.சிறிது ஆறிய பின், கிழங்கில் உப்பு,மஞ்சள் தூள்,மிளகாய் தூள்,புளி தண்ணீர்,சேர்த்து நன்றாக பிரட்டி, 10 நிமிடம் ஊற வைக்கவும். புளி தண்ணீர் சேர்ப்பது கட்டாயம், ஏனெனில், இந்த கிழங்கு வகை நாக்கில் அரிப்பு தன்மை ஏற்படுத்த கூடியது. புளி தண்ணீர் இல்லாதவர்கள், எலுமிச்ச பழ சாறு சேர்த்து கொள்ளலாம்.பிறகு, ஒரு தோசை கல்லில், நன்றாக எண்ணெய் ஊற்றி, ஊற வைத்த கிழங்குகளை போட்டு மொறு மொறு என வறுத்து எடுக்கவும்.