தேவையான பொருட்கள்
10 துண்டு வஞ்சரம் மீன்
400 கிராம் அரிசி
1/2 கப் நெய்
1/2 கப் எண்ணெய்
4 வெங்காயம்
2 தக்காளி
1 கப் தயிர்
1/2 கட்டு மல்லி தழை
1/4 கட்டு புதினா இலை
8 பச்சை மிளகாய்
5 ஏலக்காய்
3 துண்டு பட்டை
6 லவங்கம்
3 பிரிஞ்சி இலை
3 டேபிள் ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
2 டேபிள் ஸ்பூன் எலுமிச்சை சாறு
2 டேபிள் ஸ்பூன் மிளகாய் தூள்
2டீஸ்பூன் மல்லி தூள்
1டீஸ்பூன் சீரக தூள்
1டீஸ்பூன் கரம் மசாலா
1 டேபிள் ஸ்பூன் பிரியாணி மசாலா
தேவைக்கேற்ப உப்பு
செய்முறை:
மீனை மல்லி தூள்,மிளகாய் தூள், சீரக தூள்,கரம் மசாலா, எலுமிச்சை சாறு, மிளகு தூள், இஞ்சி பூண்டு விழுது மற்றும் உப்பு சேர்த்து நன்கு கிளறி,1/2 மணி நேரம் ஊற வைக்கவும்.
அரிசியை கழுவி, 1/2 மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்த மீனை பொரித்து எடுத்து, அதே எண்ணெயில், நெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை, லவங்கம், ஏலக்காய், பிரிஞ்சி இலை மற்றும் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.வெங்காயம் பொன்னிறமாக வதங்கியதும்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.பின் தக்காளி, புதினா இலை,மல்லி தழை மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து கிளறி,10 நிமிடம் மூடி போட்டு வேக விடவும்.இது வேகும் நேரத்தில்,ஒரு பாத்திரத்தில் தண்ணீரை கொதிக்க வைத்து,ஊற வைத்த அரிசியை போட்டு வேக விடவும்.முக்கால்(80%)பாகம் வெந்ததும் வடித்து கொள்ளவும்.
பின் வதக்கிய கலவையில் மிளகாய் தூள், கரம் மசாலா, பிரியாணி மசாலா,தயிர் மற்றும் உப்பு சேர்த்து கிளறவும். இந்த கலவையில் பொரித்த மீன் சேர்த்து,பின் சோறு கொஞ்சம் சேர்த்து லேயர் லேயேராக போட்டு கடைசியில் எலுமிச்சை சாறில் கலர் சேர்த்து சுற்றி ஊற்றவும். ஒரு தோசை கல்லில் வைத்து,20 நிமிடம் தம் போட்டு இறக்கவும்.சுவையான வஞ்சரம் மீன் பிரியாணி ரெடி.
