பெரம்பலூர், மார்ச் 4: பெரம்பலூரில் நாராயண சாமி சிலையை அகற்றும் நகராட்சி முடிவை கைவிட, தமிழக முதல்வரிடம் வலி யுறுத்தக்கோரி மதிமுக முதன்மைச் செயலாளர் துரை வைகோ எம்பியிடம் தமிழக விவசாயிகள் சங்கம் கோரிக்கை மனு அளித்துள்ளார்.பெரம்பலூரில் மதிமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு வருகை தந்த மதிமுக முதன்மைச் செயலாளரும், திருச்சி பாராளுமன்றத் தொகுதி எம்பியுமான துரை வைகோவிற்கு தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பாக மாநிலச் செயலாளர் இராஜா சிதம்பரம் தலைமையில் மாவட்ட தலைவர் நீல கண்டன், மாவட்ட பொருளாளர் மணி ஆகியோர் பச்சைத்துண்டு அணிவித்து, நாராயண சாமி சிலையை இடமாற்றம் செய்ய பெரம்பலூர் நகராட்சி தீர்மானம் நிறை வேற்றியுள்ள தீர்மானத்தை கைவிட, தமிழக முதமைச்சரிடம் வலியுறுத்தக்கோரி துரை. வைகோவிடம் அளித் தக் கோரிக்கை மனுவில் தெரிவித்திருப்பதாவது :
தமிழக விவசாயிகளுக் காக பல்வேறு போராட்டங்களை நடத்தி, இலவச மின்சாரம், கடன்தள்ளுபடி, ஜப்தி ரத்து உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை தமிழக அரசிடமிருந்து பெற்றுத் தந்த, உழவர் பெருந் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் தியாகத்தைப் போற்றும் வகையில் அவரது முழு உருவச்சிலை பெரம்பலூரில் அமைத்திட தமிழக விவசாயிகள் சங்கம் சார்பாக அனுமதிக்கோரி ரூ10 ஆயிரம் கட்டணம் செலுத்தி 1998 பிப்- 27 அன்று பெரம்பலூர் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வெளியே வரும் பகுதியில் இடதுபுற ஓரமாக முழுஉருவச்சிலை அமைக்கப்பட்டது.
The post விழிப்புணர்வு கலை பிரச்சாரம் நாராயண சாமி சிலையை அகற்றும் முடிவை கைவிடவேண்டும் appeared first on Dinakaran.
