இந்த ஆலோசனைக் கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது; பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட முழுமையாக உறுதி பூண்டுள்ளது. இது தொடர்பாக தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கி வருகிறது. 2025 மார்ச் 8 முதல் மணிப்பூரில் உள்ள அனைத்து சாலைகளிலும் மக்கள் சுதந்திரமாக நடமாடுவதை உறுதி செய்யவேண்டும். இடையூறு ஏற்படுத்த முயற்சிப்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். மணிப்பூரின் சர்வதேச எல்லையில் நியமிக்கப்பட்ட நுழைவு முனையங்களின் இருபுறமும் வேலி அமைக்கும் பணிகள் விரைவில் முடிக்கப்பட வேண்டும். மணிப்பூரை போதைப்பொருள் இல்லாத மாநிலமாக மாற்ற, போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டுள்ள ஒட்டுமொத்த வலைப்பின்னலும் தகர்க்கப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
The post மணிப்பூரில் நீடித்த அமைதியை நிலைநாட்ட மோடி தலைமையிலான ஒன்றிய அரசு முழுமையாக உறுதி பூண்டுள்ளது: உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு appeared first on Dinakaran.
