தமிழ்நாடு மட்டுமல்லாமல் தேசிய அளவில் பரந்த பார்வையோடு அனைத்து தேசிய இனங்களின் நலன்களை முன்னிறுத்தி அவர்களையெல்லாம் ஒருங்கிணைக்க வேண்டும் என்ற முக்கிய பொறுப்பு நம்முடைய முதல்வர், பெரியாரின் வாரிசு, அண்ணாவின் மடியில் வளர்ந்தவர், கலைஞரின் பாசறையில் வளர்ந்தவர், ஒரு கருத்தியல் வாரிசாக இன்றைக்கு அரசியல் களத்தில் துணிந்து சனாதன சக்திகளுக்கு எதிராக போர்க்குரல் எழுப்பிக் கொண்டிருக்கிற அண்ணன், தேசிய இனங்களின் ஒருங்கிணைப்பை முன்னெடுக்க வேண்டும். அவர் எடுக்கும் அத்தனை முயற்சிகளுக்கு விசிக உற்ற துணையாக இருப்போம். மீண்டும் இந்த மண்ணில் உங்கள் ஆட்சி அமைய துணையாக இருப்போம்.
இவ்வாறு அவர் பேசினார்.
The post சனாதன சக்திகளுக்கு எதிராக போர்க்குரல்: திருமாவளவன் appeared first on Dinakaran.
