சென்னை: இந்திய வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் இன்று ஓய்வு பெறுகிறார். புதிய தலைவராக மூத்த விஞ்ஞானி அமுதா நாளை பொறுப்பேற்கிறார். 34 ஆண்டுகளாக வானிலை ஆய்வு மையத்தில் பணியாற்றும் அமுதா, வடகிழக்கு பருவமழை தரவுகளை ஆராய்ந்து அதில் முனைவர் பட்டம் பெற்றுள்ளார்.