திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு

 

திருவள்ளூர், பிப்.28: திருவள்ளூர் மாவட்டம், செவ்வாப்பேட்டை, வேப்பம்பட்டு, திருநின்றவூர் ஆகிய பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறை மூலம் நடைபெற்று வரும் ரயில்வே மேம்பால பணிகள்,பாலம் தூண்கள் அமைக்கும் பணிகள், சென்னை – திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் மேற்கொள்ளப்பட்டு வரும் பண்களை கலெக்டர் மு.பிரதாப் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். அப்போது பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டிற்கு கொண்டு வர அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

வரும் 2026 ஜனவரி மாதத்திற்குள் பாலப்பணிகள் முடிக்கப்பட்டு பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வின்போது தேசிய நெடுஞ்சாலை ஆணைய இயக்குநர் ரவீந்திரநாத், மாவட்ட வருவாய் அலுவலர் (நில எடுப்பு) பேபி இந்திரா, நெடுஞ்சாலைத்துறை திட்ட உதவி இயக்குநர்கள் மணிவண்ணன், கார்த்திகேயன், வட்டாட்சியர்கள் திருவள்ளூர் ரஜினிகாந்த், (நில எடுப்பு) பாலாஜி, சந்திரா மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

The post திட்டப் பணிகளை கலெக்டர் ஆய்வு appeared first on Dinakaran.

Related Stories: