தமிழகத்தில் ஏற்கனவே உள்ள 39 தொகுதியில் இருந்து 8ஐ குறைத்து 31 ஆக மாற்ற உள்ளனர். 39 பாராளுமன்ற தொகுதிகளை குறைக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எண்ணிக்கையை பற்றிய கவலை மட்டுமல்ல, இது மாநிலங்களின் உரிமை தொடர்பான பிரச்னை. மிகப்பெரிய உரிமை மீட்பு போராட்டம் நடத்த வேண்டிய சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளோம். தொகுதி மறுசீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் தலைக்கு மேல் கத்தி தொங்குகிறது. 8 பாராளுமன்ற இடங்கள் குறைவதால், நமது பிரதிநிதித்துவம் குறையும். தொகுதி மறு சீரமைப்பு தொடர்பாக 5ம் தேதி அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறும்.
மார்ச் 5ம் தேதி நடைபெறும் அனைத்துக்கட்சி கூட்டத்தில் அரசியல் கடந்து அனைவரும் கலந்துகொள்ள வேண்டும். தேர்தல் ஆணையத்தில் பதிவு பெற்ற அனைத்து கட்சிகளுக்கும் பங்கேற்க அழைப்பு விடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்தார். இந்நிலையில், தொகுதி மறுவரையறையில் தமிழ்நாட்டுக்கு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு ஏற்படுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் பேசிய நிலையில், FairDelimitationForTN என்ற ஹேஸ்டேக் தேசிய அளவில் டிரெண்டாகி வருகிறது. இதில் ஒவ்வொருவரும் தங்களுடைய கருத்துகளை பதிவு செய்து வருகின்றனர். அதில், ஒன்றிய அரசின் நடவடிக்கைக்கு பலர் கண்டனங்களை தெரிவிக்கின்றனர்.
The post தொகுதி மறுவரையில் தமிழ்நாட்டு அரசியல் பிரதிநிதித்துவ இழப்பு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு தேசிய அளவில் ‘டிரெண்டிங்’ appeared first on Dinakaran.
