ஒன்றிய அரசை கண்டித்து திருத்தணி திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம்

திருத்தணி: ஒன்றிய பாஜ அரசின் மும்மொழி கொள்கையை கண்டித்து, திருவள்ளூர் மேற்கு மாவட்ட மாணவரணி சார்பில், திருத்தணி பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் நேற்று மாவட்ட மாணவரணி அமைப்பாளர் முரளி சேனா தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், மாணவர் அணியினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு, இந்தி மொழி திணிப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து, ஒன்றிய பாஜ அரசை கண்டித்து கமலா திரையரங்கம் அருகிலிருந்து பிஎஸ்என்எல் அலுவலகம் வரை பேரணியாகச் சென்று பிஎஸ்என்எல் அலுவலகம் எதிரில் கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டத்தால், ஒன்றிய அரசின் பிஎஸ்என்எல் அலுவலகம் பகுதியில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். இதில், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாணவர் பேரவை மாநில பொதுச்செயலாளர் நூர்முகமது, மாணவரணி மாவட்ட துணை அமைப்பாளர்கள் லிங்கேஸ்வரன், பிரபா, எழிலரசன், கோபிநாத் உட்பட மாணவர்கள் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

The post ஒன்றிய அரசை கண்டித்து திருத்தணி திமுக மாணவர் அணியினர் ஆர்ப்பாட்டம் appeared first on Dinakaran.

Related Stories: