இறுதிச்சடங்கில் பங்கேற்ற முதியவர் நெரிசலில் சிக்கி பலி

ஊத்தங்கரை, பிப்.25: கிருஷ்ணகிரி மாவட்டம், சிங்காரப்பேட்டை அடுத்த சின்னதாள்ளபாடி பகுதியை சேர்ந்தவர் ராமசாமி(65). இவர் அதே பகுதியில், இறந்து போன லட்சுமணன் என்பவரது இறுதி சடங்கில் கலந்துகொண்டார். அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கிய ராமசாமி, திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ராமசாமி ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுபற்றி ஊத்தங்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post இறுதிச்சடங்கில் பங்கேற்ற முதியவர் நெரிசலில் சிக்கி பலி appeared first on Dinakaran.

Related Stories: