பூந்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு மாநாடு

 

பூந்தமல்லி, பிப்.23: ஒன்றிய அரசின் அரசியலமைப்பு விரோத வக்பு மசோதா 2024ஐ ரத்து செய்ய வேண்டும், 1991 வழிபாட்டுத்தலங்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, திருவள்ளூர் மேற்கு மாவட்ட எஸ்.டி.பி.ஐ. கட்சியின் சார்பில் பூந்தமல்லி குமணன்சாவடியில் வக்பு உரிமை மீட்பு மாநாடு மற்றும் பொதுக்கூட்டம் நேற்று முன்தினம் மாலை நடந்தது. மாவட்ட பொதுச் செயலாளர் பூவை ரஹ்மத்துல்லா வரவேற்றார்.

மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நவ்ஃபீல், போரூர் அனைத்து பள்ளிக் கூட்டமைப்பு தலைவர் சலீம், மண்டல தலைவர்கள் முகமது இஸ்மாயில், பூட்டோ மொய்தீன், சீனி முகமது, அகமது, சாதிக், ஜாபர் ஷெரிப் முன்னிலை வகித்தனர். மாநாட்டில் மாநில பொதுச் செயலாளர் அபூபக்கர் சித்திக், மாநில செயற்குழு உறுப்பினர் தெஹலான் பாகவி, மாநில துணைத் தலைவர் கிண்டி அன்சாரிபேசினர்.

இதில் ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு திருத்தச் சட்ட மசோதாவை ரத்து செய்யவும், வழிபாட்டு தலங்களை பாதுகாப்பதற்கான சட்டத்தை அமல்படுத்த வேண்டும், மதத்தின் பெயரால் பிரிவினையை தூண்டும் ஒன்றிய அரசை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

The post பூந்தமல்லியில் எஸ்டிபிஐ கட்சி சார்பில் வக்பு உரிமை மீட்பு மாநாடு appeared first on Dinakaran.

Related Stories: