சமயபுரம், பிப்.22: மண்ணச்சநல்லூர் அடுத்த மூவானூர் அரசு பள்ளியில் ரூ.1.15 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி பூமி பூஜையுடன் துவங்கியது.மண்ணச்சநல்லூர் சட்ட மன்ற தொகுதிக்கு உட்பட்ட ஊராட்சி மற்றும் கிராம புறங்களில் எம்எல்ஏ கதிரவன் ஆய்வு மேற்கொண்டு கிராம மக்களின் குறைகளான மழைநீர் வடிகால் வசதி, பொது கழிப்பிட வசதி, குடிநீர் வசதி, சாலை வசதி, மின் மாற்றி வசதி என மக்களின் குறைகளை கேட்டு அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக செய்து வருகிறார்.
இந்நிலையில் கடந்த மாதம் மூவானூர் கிராமத்தில் ஆய்வு மேற்கொண்ட எம்எல்ஏ கதிரவன், அங்குள்ள அரசு மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் பங்கேற்றார். அப்போது பள்ளியின் தலைமை ஆசிரியர் மற்றும் மணவர்கள் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறை கட்டி தருமாறு எம்எல்ஏவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து தலைமை ஆசிரியர் மற்றும் பள்ளி மாணவர்களின் கோரிக்கையை எற்று கொண்டு உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டார்.
The post மூவானூர் அரசு பள்ளியில் 1.15 கோடியில் கூடுதல் வகுப்பறை கட்டும் பணி appeared first on Dinakaran.
