வாழப்பாடி, பிப்.21: வாழப்பாடியில், சேலம் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க கிளையில், நேற்று முன்தினம் பருத்தி ஏலம் நடந்தது. இதில் விவசாயிகள் 1560 பருத்தி மூட்டைகளை கொண்டு வந்தனர். வியாபாரிகள் 14பேர் கலந்து கொண்டனர். இதில் டிசிஹெச் ரகம் குவிண்டால் அதிகபட்சம் ₹10880க்கும், குறைந்த பட்சம் ₹8899க்கும் ஏலம் போனது. ஆர்சிஹெச் ரகம் அதிகபட்சம் ₹8380க்கும், குறைந்த பட்சம் ₹6026 வரையும், கொட்டு ரகம் அதிக பட்சம் ₹4439க்கும் குறைந்த பட்சம் ₹3339 வரை ஏலம் போனது. மொத்தம் ₹45.26 லட்சத்திற்கு பருத்தி ஏலம் போனது.
The post ₹45.26லட்சத்திற்கு பருத்தி ஏலம் appeared first on Dinakaran.
