புழல் அருகே ரூ.60 லட்சத்தில் குளம் சீரமைப்பு

புழல்: புழல் அருகே ரூ.60 லட்சம் செலவில் மாநகராட்சி குளத்தினை சீரமைத்து, நடபாதை அமைக்கும் பணியை வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தொடங்கி வைத்தார். மாதவரம் மண்டலம், 31வது வார்டு புழல் அடுத்த கதிர்வேடு ஸ்ரீ லட்சுமி நகரில் சுமார் இரண்டு ஏக்கர் பரப்பளவில் ஊத்துக்குளம் உள்ளது. இக்குளத்தை ரூ.60 லட்சம் செலவில் சீரமைத்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நடைபயிற்சி மேற்கொள்வதற்காக, குளத்தைச் சுற்றி 250 மீட்டர் தூரத்தில் நடைபாதை அமைக்கும் பணிக்கான பூமிபூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

இதில், வார்டு கவுன்சிலர் சங்கீதா பாபு தலைமை தாங்கி, குளத்தை சீரமைத்து நடபாதை அமைக்கும் பணியை தொடங்கி வைத்தார். அப்போது, இப்பணிகள் அனைத்தும் விரைவில் முடிக்கப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு ஒப்படைக்கப்படும் என மாநகராட்சி அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிகழ்ச்சியில் மாதவரம் மண்டல செயற்பொறியாளர் கார்த்திகேயன், உதவி செயற்பொறியாளர் ஜெயலட்சுமி, உதவி பொறியாளர் லோகேஷ், சமூக சேவகர் கதிர்வேடு பாபு, காங்கிரஸ் நிர்வாகிகள், திமுக நிர்வாகிகள், பகுதி குடியிருப்பு சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

The post புழல் அருகே ரூ.60 லட்சத்தில் குளம் சீரமைப்பு appeared first on Dinakaran.

Related Stories: