கடந்த சில நாட்களில் குளம் முழுவதும் மீன்கள் செத்து கிடப்பதால் துர்நாற்றம் வீசத் தொடங்கியது. இதனால் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அவ்வழியாக செல்லும் பொதுமக்கள் துர்நாற்றம் தாங்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகின்றனர். இதனால் நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலகத்திற்கு தகவல் கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே கோயில் குளத்தில் செத்துக்கிடக்கும் மீன்களை அப்புறப்படுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை வைத்துள்ளனர்.
The post தொழுவூர் ஊராட்சியில் உள்ள கோயில் குளத்தில் செத்து மிதக்கும் மீன்கள்: நோய் பரவும் அபாயம் appeared first on Dinakaran.
