இந்த சேவல் நாள்தோறும் அதிகாலை 3 மணிக்கு கூவுவதால், தூங்க முடியாமல் ராதாகிருஷ்ணா அவதிப்பட்டுள்ளார். வயது மூப்பு காரணமான நோயால் அவதிப்பட்டுவரும் ராதாகிருஷ்ணா, இரவில் தூக்கமின்மையால் அவதிப்பட்டு, அதிகாலையில் தூங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இதனால் மன அழுத்தத்திற்கு ஆளான ராதாகிருஷ்ணா அடூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ராதாகிருஷ்ணன் குருப் என்பவர் வழக்கு தொடர்ந்தார். தினமும் அதிகாலையில் அந்தச் சேவல் கூவுவதால் தூங்க முடியவில்லை எனப் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தப் புகாரை தீவிரமாக எடுத்துக்கொண்ட அதிகாரிகள், சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
ராதாகிருஷ்ணா, அனில் குமார் ஆகிய இருவரையும் வைத்து விசாரணை நடத்தி தீர்வு காண முயன்றனர். இதில், அனில் குமார் வளர்த்துவரும் சேவல் வீட்டின் மாடியில் வளர்க்கப்பட்டு வருகிறது. அதன் காரணமாகவே, சேவல் கூவுவது மற்றவர்களுக்கு இரைச்சலாக இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதையடுத்து, அந்த முதியவரைப் பாதிக்காத வகையில், மொட்டை மாடியில் அமைக்கப்பட்டுள்ள சேவல் கூண்டை அனில்குமார் என்பவர் 14 நாட்களுக்குள் வேறுஇடத்துக்கு மாற்றிட வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டுள்ளார். தூக்கத்தைக் கெடுத்த சேவல் மீது புகார் கொடுத்த விவகாரம் அப்பகுதியில் பேசுபொருளாகி உள்ளது.
The post தினமும் அதிகாலையில் 3 மணிக்கே சேவல் கூவி தூக்கத்தை கெடுப்பதாக வழக்கு.. முதியவர் அளித்த புகாரால் பரபரப்பு!! appeared first on Dinakaran.
