கிருஷ்ணகிரி, பிப்.19: சூளகிரி அருகேயுள்ள சானமாவு கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். இவரது மனைவி அற்புதம்(40). கடந்த ஒன்றரை ஆண்டுகளாக, ராயக்கோட்டை அடுத்த உடையாண்டஅள்ளி பகுதியில் உள்ள தனது தந்தை வீட்டின் அருகே, அற்புதம் தனியாக வசித்து வந்தார். நேற்று முன்தினம் காலை, வீட்டில் இருந்து வெளியே சென்றவர், பின்னர் வீடு திரும்பவில்லை. இதனால் குடும்பத்தினர் அவரை தேடிய போது, அதே பகுதியில் உள்ள சுந்தரேசன் என்பவரது விவசாய கிணற்றில், அற்புதம் சடலமாக கிடப்பது தெரியவந்தது. தகவல் அறிந்து வந்த ராயக்கோட்டை போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில் அவர் கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது தெரியவந்தது. இதுகுறித்து ேபாலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.
The post கிணற்றில் தவறி விழுந்து பெண் சாவு appeared first on Dinakaran.
