பெரம்பூர்: பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வீனஸ் பேருந்து நிறுத்தம் அருகே நேற்று முன்தினம் இரவு 8 மணிக்கு, பிஸ்கட் ஏற்றிக்கொண்டு ரெட்டேரி பகுதியிலிருந்து பெரம்பூர் நோக்கி சென்ற சரக்கு ஆட்டோ, திடீரென சாலை தடுப்பு மீது மோதி சாலையில் கவிழ்ந்தது. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து மற்றும் சட்டம் ஒழுங்கு போலீசார், அந்த வாகனத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேலும், பெரவள்ளூர் சதுக்கத்தில் வாகனங்களை மடக்கி எஸ்.ஆர்.பி கோயில் தெரு வடக்கு மற்றும் பல்லவன் சாலை வழியாக அனுப்பி வைத்தனர். பின்னர், சுமார் அரை மணி நேரம் போராடி சாலையில் விழுந்த வாகனத்தை மீட்டு, அனுப்பி வைத்தனர் இந்த விபத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயங்கள் ஏற்படவில்லை.
The post சரக்கு ஆட்டோ கவிழ்ந்தது appeared first on Dinakaran.