இந்த நிலையில் கடந்த ஆண்டில் வெளியானது மஞ்சுமெல் பாய்ஸ் என்ற மலையாள படம் குணா குகைக்குள் உள்ள பள்ளத்தில் விழுந்த நண்பரை மீட்கும் போராட்டத்தை மையக்கருவாக கொண்டு இந்த படம் வெளியான பின் கொடைக்கானல் வருபவர்களின் முதல் தேர்வாக குணா குகை உருவானது. குகைக்குள் உள்ள மிக பெரிய பள்ளத்தில் 12 பேர் விழுந்ததாக கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் மட்டுமே உயிருடன் மீட்கப்பட்டார். தொடர் உயிரிழப்புகளால் கடந்த 2006 ஆம் ஆண்டு குகைக்குள் செல்ல முடியாது அளவிற்கு தடுப்புகள் அமைக்கப்பட்டன.
ஆனால் படங்களில் மட்டுமே பார்த்த குணா குகைக்குள் அப்படி என்னதான் இருக்கிறதுன் என்ற ஆர்வத்தில் இங்கு படம் எடுப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ரீலிஸ், ஷார்ட்ஸ், செல்ப்பி எடுப்பதற்காகவே பெருங்கூட்டம் வந்தாலும் வனத்துறையினர் அமைத்துள்ள தடுப்பு கம்பிகளை மட்டுமே பார்த்து செல்கின்றனர். இதனை தடுக்க குகைக்குள் என்ன இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ள போட்டோ அல்லது காட்சிகளாக திரையில் ஒளிபரப்ப வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது. மஞ்சுமெல் பாய்ஸ்படம் வெளியான பின் குணா குகைக்கு மட்டும் நாளொன்றுக்கு சராசரியாக 5 ஆயிரம் பேரும் கடந்த ஓராண்டில் மட்டும் சுமார் 18 லட்சம் பேரும் வந்து சென்றுள்ளனர்.
The post குணா குகைக்கு ஓராண்டில் 18 லட்சம் பேர் வருகை: மஞ்சுமெல் பாய்ஸ் படத்திற்கு பின் அதிகரித்த மவுசு appeared first on Dinakaran.