அவரது பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகப் படத்திலிருந்து அவரது கேரக்டர் போஸ்டரை தயாரிப்பாளர்கள் வெளியிட்டுள்ளனர். நவாசுதீன் சித்திக் விகாஸ் மாலிக் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கிறார், கேரக்டர் போஸ்டரில், அவர் காரின் பானட்டில் அமர்ந்து பீடி புகைப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இதில் கொடூர வில்லனாக அவர் நடிக்கிறார். இப்படத்தில் மனோக்யா எனும் பாத்திரத்தில் நாயகியாக ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கிறார், டாக்டர் ரேணுவாக ருஹானி ஷர்மாவும், ஜாஸ்மின் வேடத்தில் ஆண்ட்ரியாவும் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, எஸ்.மணிகண்டன் ஒளிப்பதிவு செய்கிறார். கேரி பி.ஹெச். எடிட்டராக பணியாற்றுகிறார். தென்னிந்திய மொழிகளிலும் இந்தியிலும் டிசம்பர் 22 அன்று கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு படம் வெளியாகிறது.
The post டோலிவுட்டுக்கு வருகிறார் நவாசுத்தீன் சித்திக் appeared first on Kollywood News | Kollywood Images - Cinema.dinakaran.com.