வழக்கை விசாரித்த நீதிபதி, சாதியை நீடித்து நிரந்தரமாக்கச் செய்யும் வகையிலான மனுதாரரின் கோரிக்கை, அரசியல் சாசனம் மற்றும் பொது கொள்கைக்கு விரோதமானது. சாதியில்லா சமுதாயம் தான் நம் அரசியல் சாசனத்தின் இலக்கு. சாதியை நிரந்தரமாக்கச் செய்யும் எதையும் நீதிமன்றம் பரிசீலிக்காது. சமூகத்தை பிளவுபடுத்தி, ஏற்றத்தாழ்வுகளை உருவாக்கி, கலவரங்களை தூண்டும் சாதி, சமூக வளர்ச்சிக்கு எதிரானது. சாதி அடிப்படையில் எந்த பாரபட்சமும் இருக்க கூடாது. சாதியில்லா சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசியல் சாசனத்தை வகுத்த தலைவர்களின் கனவாக இருந்துள்ளது.
அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை. அறங்காவலர் பதவிக்கு, பக்தி, நம்பிக்கையுடன், ஆன்மீக, அற சிந்தனை தான் அவசியம். சாதி அல்ல எனக் கூறி, மனுதாரரின் கோரிக்கை மனுவை தள்ளுபடி செய்யுமாறு இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையருக்கு உத்தரவிட்டார். அரசியல் சாசனம் வகுத்து 75 ஆண்டுகள் கடந்த நிலையில், சாதி என்ற தேவையில்லாத சுமையை, சமுதாயத்தில் உள்ள சில பிரிவினர் இன்னும் கீழிறக்கவில்லை.
The post சமூக வளர்ச்சிக்கு சாதி எதிரானது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.
