தா.பழூர் வட்டார விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம்

தா.பழூர், பிப்.14: அரியலூர் மாவட்டம் தா.பழூர் வட்டார பகுதியில் உள்ள விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் நடைபெற்று வருகிறது. தா.பழூர் அருகே உள்ள இருகையூர் கிராமத்தில் நடைபெற்ற முகாமில் அரியலூர் மாவட்ட வேளாண் இணை இயக்குனர் கீதா தலைமையில் ஆய்வு நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் (வேளாண் ) நேர்முக உதவியாளர் ராதாகிருஷ்ணன், வேளாண்மை உதவி இயக்குனர் ரவி, வேளாண்மை அலுவலர் தமிழ்மணி உள்ளிட்டர் கலந்து கொண்டனர்.இந்த முகாம் தொடர்ந்து 10 நாட்கள் வரை அனைத்து ஊராட்சி மன்ற அலுவலகங்களிலும் நடைபெற உள்ளது.

தா.பழூர் வட்டார பகுதி விவசாயிகள் வேளாண்மை மற்றும் வேளாண்மை சார்ந்த திட்டங்களில் அவர்களின் சுய விபரங்களை விவசாயிகள் பெரும் பதிவேடு ஃபார்மர் ரிஜிஸ்ட்ரி என்னும் புதிய திட்டத்தில் கீழ் பதிவு செய்து கொள்ள வேண்டும்.விவசாயிகள் பெரும் பதிவேடு வேளாண்மை துறை, தோட்டக்கலை துறை வேளாண் பொறி யியல் துறை கால்நடை பராமரிப்புத்துறை, கூட்டு றவு துறை உணவுத்துறை, பொதுப்பணித்துறை, வேளாண் வணிகத்துறை ஆகிய துறைகளின் கீழ் செயல்படுத்தப்படும் அனைத்து திட்டங்களின் கீழ் விவசாயிகள் பயன்பெற இயலும் இப்பெரும் பணியினை ஒருங்கிணைந்து செயல்படுத்திட மகளிர் திட்டம், சமுதாய வளர் பயிற்றுநர் மற்றும் அரசு அலுவலர்கள் ஒருங்கிணைந்த கிராமம் தோறும் விவசாயிகள் பதிவு முகாம் ஊராட்சி மன்ற அலுவலகம் மற்றும் கிராம நிர்வாக அலுவலங்களில் 10 நாட்கள் வரை நடைபெறுகிறது.

தமிழ்நாட்டின் ஒருங்கிணைந்த விவசாயிகள் தரவுதளமானது, அரசின் மானிய திட்டங்கள் மற்றும் பலன்களை விவசாயிகள் எளிதாக பெற ஒரு தனிப்பட்ட அடையாள எண்ணை பெற உதவுகிறது. விவசாயம் சார்ந்த திட்டங்கள் மற்றும் சேவைகளை தடையின்றி பெற இப்போதே பதிவு செய்யவும். முகாமில் விவசாயிகள் பதிவு செய்துகொள்ள அவர்களின் ஆதார் நகல், ஆதருடன் இணைக்கப்பட்ட கைப்பேசி, நில கணினி சிட்டா நகல் கொண்டு வந்து பதிவு செய்து கொள்ள கேட்டுக் கொள்ளப்படுகிறது. எனவே விவசாயிகள் அவர்கள் நில உடமைகளை சரிபார்த்திடவும் வேளாண்மை சார்ந்த நலத்திட்டங்கள் பெற்றிடவும் தங்கள் கிராமங்களை தேடி வரும் முகாமினை விவசாயிகள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என வேளாண்மை துறை சார்பில் தெரிவித்துள்ளனர்.

The post தா.பழூர் வட்டார விவசாயிகளின் நில உடைமை பதிவுகள் சரிபார்த்தல் முகாம் appeared first on Dinakaran.

Related Stories: