பெரம்பூர்: பெரம்பூர் எஸ்.எஸ்.வி.கோயில் தெருவைச் சேர்ந்தவர் ஜான் ஜோசப் (40). இவர் கடந்த 9ம் தேதி தனது குடும்பத்துடன் பெரம்பூரில் உள்ள சர்ச்சுக்கு சென்றுவிட்டு மீண்டும் வீட்டிற்கு வந்தார். அப்போது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு உள்ளே இருந்த ஹோம் தியேட்டர் மற்றும் ட்ரில்லிங் மிஷின் உள்ளிட்ட பொருட்கள் திருடு போனது தெரிந்தது. இதுகுறித்து செம்பியம் போலீசார் சிசிடிவி கேமரா காட்சிகள் அடிப்படையில் நேற்று ஓட்டேரி மங்களபுரம் பகுதியைச் சேர்ந்த கணேஷ் (19) என்பவரை கைது செய்தனர். இவர் தனது நண்பர் அர்ஜூன் என்பவருடன் சேர்ந்து இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
The post ஹோம் தியேட்டர் திருடியவர் கைது appeared first on Dinakaran.
