ஒன்றிய பாஜ அரசும், அமெரிக்காவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் இருசக்கர வாகனங்கள், செயற்கை சுவையூட்டிகள் மீதான இறக்குமதி வரியை வெகுவாக குறைத்து தனது ஏகாதிபத்திய விசுவாசத்தை காட்டியுள்ளது. 2வது முறையாக அதிகாரத்தை கைப்பற்றியுள்ள டொனோல்டு டிரம்ப் அதிகார மமதையில், ஆவணத் திமிரோடு, இந்தியர்கள் மீது எதிர் நடவடிக்கைகளை தீவிரமாக்கி வருவதை நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு தெரிவிக்கும் போது, ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் அமெரிக்காவிற்கு ஆதரவாக பேசுகிறார். உரிய ஆவணங்கள் இல்லாமல் இருப்பவர்களை வெறியேற்றும் போது, கை, கால்களில் விலங்கு போடுவது 2012 முதல் வழக்கத்தில் உள்ள நடைமுறை தான் என்று கூறுகிறார்.
அமெரிக்க அரசின் ஆணவச் செயலையும், அதனை ஆதரித்து பேசும் ஒன்றிய பாஜ அரசின் நிலையினை கண்டித்து இன்று (வெள்ளிக்கிழமை) காலை 10 மணிக்கு, சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் எனது தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெறும். இந்த ஆர்ப்பாட்டத்தில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி கட்சித் தலைவர்கள் டிகேஎஸ்.இளங்கோவன் (திமுக), செல்வப்பெருந்தகை (காங்கிரஸ்), திருமாவளவன் (விசிக), வைகோ (மதிமுக), பி.சண்முகம் (மார்க்சிஸ்ட்), கலி பூங்குன்றன் (திக), காதர் மொய்தீன் (முஸ்லிம் லீக்), ஜவாஹிருல்லா (மனித நேய மக்கள் கட்சி) வேல்முருகன் (தவாக), ஈ.ஆர்.ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் கட்சி), ஆ.அருணாச்சலம் (மக்கள் நீதி மய்யம்) உள்ளிட்டோர் கண்டன உரையாற்றுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
The post அமெரிக்க அரசின் ஆணவ செயலை கண்டித்து இந்திய கம்யூனிஸ்ட் இன்று சென்னையில் ஆர்ப்பாட்டம்: முத்தரசன் தகவல் appeared first on Dinakaran.
