துரைப்பாக்கம்: இசிஆர் சாலை அக்கரை சந்திப்பில் பைக்கில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்களை, போலீசார் கைது செய்தனர். கிழக்கு கடற்கரை சாலை அக்கரை சந்திப்பில், நீலாங்கரை போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, ஒரே பைக்கில் வந்த 3 பேர் மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்தனர். சந்தேகமடைந்த போலீசார், பைக்கை சோதனையிட்டபோது, அதில் கஞ்சா வைத்திருப்பது தெரியவந்தது.
இதனையடுத்து, 3 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து நடத்திய விசாரணையில், திருவான்மியூரை சேர்ந்தவர்கள் ஆனந்த் (30), சானுசீமோன் (22), ரிச்சர்ட் கிராந்தி (30) என்பதும், இவர்கள் விற்பனை செய்வதற்காக கஞ்சாவை பைக்கில் கடத்தி சென்றதும் தெரியவந்தது. அவர்களிடமிருந்து 2 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர். மேலும், கைதான 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்த போலீசார், அவர்களை ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.
The post பைக்கில் கஞ்சா கடத்திய 3 வாலிபர்கள் சிக்கினர் appeared first on Dinakaran.
