எதிர்க்கட்சி அரசியலைகூட அவர் சரியாக செய்யவில்லை. தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே உள்ள நிலையில், திமுகவை வீழ்த்தும் வலிமை அதிமுகவிற்கு இல்லை. அதிமுகவின் அனைத்து மட்டங்களிலும் எடப்பாடி பழனிசாமி மீது அதிருப்தி உள்ளது. அதற்கு செங்கோட்டையன் போர்க்கொடி தூக்கியதே சாட்சி. கட்சி தலைமையை தக்க வைக்க எடப்பாடி பழனிசாமி காட்டும் ஆர்வத்தை, கட்சியை வலிமைப்படுத்துவதில் காட்டுவதில்லை. அதிமுக தலைமை மாற்றத்தை நோக்கி பயணிக்கிறது. டெல்லி கழுகுகள் எடப்பாடி பழனிசாமியை சுற்றி வட்டமிடுகின்றன. அதிமுக அடிமட்ட தொண்டர்களின் உணர்வுகள் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக உள்ளது. எடப்பாடி பழனிசாமி, எஸ்.பி.வேலுமணி சுயநலமாக நடப்பது அதிமுகவிற்கு பாதிப்பை ஏற்படுத்தும். அதிமுகவில் தலைமை மாற்றம் ஏற்படும். கொஞ்ச காலத்திற்கு இரட்டை இலை சின்னம் முடக்கப்படும். அதிமுக மீண்டும் ஒன்றுபடுத்தப்படலாம். இவ்வாறு அவர் கூறினார்.
The post டெல்லி கழுகுகள் இபிஎஸ்-ஐ வட்டமிடுகின்றன அதிமுக தலைமை மாறும் இரட்டை இலை முடக்கப்படும்: கே.சி.பழனிசாமி பேட்டி appeared first on Dinakaran.
