அதற்கான கருவிகள் எங்கும் இல்லை, ஸ்டான்லி மருத்துவமனையிலும் விசாரித்துட்டேன் எங்கேயும் கிடைக்கவில்லை. குழந்தை 6ம் வகுப்பு போயிருக்கிறாள். கொஞ்சம் சீக்கிரம் கிடைக்க ஏற்பாடு செய்தால் நன்றாக இருக்கும்’’ என்று காலையில் முதல்வரிடம் குழந்தையின் தந்தை கோரிக்கை வைத்தார். இதையடுத்து மாலை 6 மணிக்குள் குழந்தைக்கு காது கேட்கும் கருவிகள் கிடைக்க முதல்வர் மு.க.ஸ்டாலின் நடவடிக்கை எடுத்துள்ளார். அதற்கு குழந்தையின் தந்தை முதல்வருக்கு நன்றி தெரிவித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
இது குறித்து குழந்தையின் தந்தை பேசியதாவது: திரிசூலம் பகுதியில் இருந்து பள்ளி விடுமுறை என்பதால் குழந்தையை மெரினா கடற்கரைக்கு அழைத்து சென்றேன். கடற்கரையை சுற்றிப் பார்த்து விட்டு கலைஞர் நினைவிடத்திற்கு சென்றேன். அப்போது முதல்வர் கலைஞர் நினைவிடத்திற்கு சென்று விட்டு வெளியில் வந்தார். நாங்கள் மக்களுடன் கூட்டத்தில் நின்று கொண்டு இருந்தோம். அப்போது முதல்வரை பார்த்து வணக்கம் வைத்தேன். உடனே முதல்வர் எங்களை நோக்கி வந்து, ‘சொல்லுங்கள்..’ என்று கேட்டார். என்னுடைய பெண்ணுக்கு காது பிரச்சனை இருக்கிறது, சீக்கிரமாக சரி பண்ணித்தர வேண்டும் என்று காலையில் தான் கோரிக்கை வைத்தேன். மாலை 6 மணிக்குள் காதுக்கான கருவி கிடைத்தது. இப்போது அந்த கருவி மாட்டியதால் நன்றாக கேட்கிறது என மகள் மகிழ்ச்சியில் இருக்கிறாள், நாங்கள் சந்தோஷமாக இருக்கிறோம் என முதல்வருக்கு நன்றி கூறினார்.
The post கலைஞர் நினைவிடத்தில் காலையில் வைத்த கோரிக்கையை மாலையில் நிறைவேற்றிய முதல்வர்: குழந்தையின் தந்தை நன்றி appeared first on Dinakaran.